மங்களூரு- -- யஷ்வந்த்பூர் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்
மங்களூரு- -- யஷ்வந்த்பூர் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்
ADDED : ஆக 01, 2024 11:07 PM
மங்களூரு: சக்லேஸ்பூர் அருகே தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதால், மங்களூரு - யஷ்வந்த்பூர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ரயில் இயக்கப்படும் போது, புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு யஷ்வந்த்பூருக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் எண்: 16576 இயக்கப்படுகிறது. மங்களூரு சந்திப்பில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8:45 மணிக்கு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
இந்த ரயிலை, காலை 7:00 மணிக்கு இயக்கினால் பயணியருக்கு அனுகூலமாக இருக்கும் என்று, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடம், தட்சிண கன்னடா பா.ஜ., -- எம்.பி., பிரிஜேஷ் சவுடா கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று, ரயில் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 7:00 மணிக்கு மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் புறப்பட்டு, மாலை 4:30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடைகிறது. சக்லேஸ்பூர் அருகே தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதால், பெங்களூரு - மங்களூரு ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை மீண்டும் துவங்கும் போது, மாற்றியமைக்கப்பட்ட நேரத்தில் ரயில் இயங்கும்.