ADDED : ஜூன் 23, 2024 06:22 AM

பெங்களூரு: ''அமைச்சரவை மாற்றம் செய்வதை கட்சி மேலிடம் தீர்மானிக்கும். சில நேரங்களில் உண்மை கண்டறியும் குழுவின் முடிவின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம்.
ஆனால், ஒன்பது இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதற்கான காரணத்தை அறிய, உண்மை கண்டறியம் குழுவை, கட்சி மேலிடம் அமைத்துள்ளது.
இது, கர்நாடகாவில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் அமைக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவை மாற்றம் செய்வதை கட்சி மேலிடம் தீர்மானிக்கும். சில நேரங்களில் உண்மை கண்டறியும் குழுவின் முடிவின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.