போக்சோ வழக்கில் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
போக்சோ வழக்கில் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : ஜூன் 27, 2024 09:30 PM

பெங்களூரு: போக்சோ வழக்கில் முன்னாள் பா.ஜ., முதல்வர் எடியூரப்பா மீது சி.ஐ.டி.போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் பா.ஜ.,வின் எடியூரப்பா, 81. கடந்த பிப்ரவரி 2ம் தேதி, மமதா, 55, என்ற பெண், தன் 17 வயது மகளுடன், உதவி கேட்டு, அவரது டாலர்ஸ் காலனி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது தன் மகளை அறைக்குள் அழைத்து சென்று, பாலியல் ரீதியாக சீண்டியதாக, அப்பெண் சதாசிவ நகர் போலீசில், மார்ச் 14ம் தேதி புகார் அளித்தார். 17 வயது சிறுமி என்பதால், 'போக்சோ' சட்டத்தின் கீழ், எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். கோர்ட் உத்தரவுப்படி பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜரானார். தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யும்படி, உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் எடியூரப்பா மீது சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.