தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கள்ளத்தொடர்பு மனைவி மிரட்டல்; கணவர் துாக்கிட்டு தற்கொலை

கள்ளத்தொடர்பு மனைவி மிரட்டல்; கணவர் துாக்கிட்டு தற்கொலை

கள்ளத்தொடர்பு மனைவி மிரட்டல்; கணவர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மார் 26, 2024 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவிந்தபுரா : மனைவியின் கள்ளத்தொடர்பாலும், பொய் வரதட்சணை புகார் அளிப்பதாக மிரட்டியதாலும் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு, கோவிந்தபுராவை சேர்ந்தவர் சையது அக்மல் அன்சார், 34. தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தார். இவரது மனைவி கதிஜல் குப்ரா, 30. இருவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கதிஜலுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி அறிந்த கணவர், மனைவியை கண்டித்து உள்ளார். கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறி உள்ளார்.

ஆனால் ஏற்க மறுத்த மனைவி, 'கள்ளத்தொடர்பை கைவிட வேண்டும் என்றால், 5 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லாவிட்டால் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, போலீசில் புகார் அளிப்பேன்' என்று மிரட்டி உள்ளார்.

மேலும், இரண்டு பிள்ளைகளுடன் கடந்த 1ம் தேதி, பெற்றோர் வீட்டிற்கு கதிஜல் சென்று விட்டார். பிள்ளைகளுடன் வீடியோ காலில் பேசவும், கணவரை அனுமதிக்கவில்லை. மனம் உடைந்த சையது வீட்டில், கடந்த 12ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன் சாவுக்கு மனைவி கதிஜல், மாமனார் முனாவர் மற்றும் அவரது குடும்பத்தினர் காரணம் என்று, சுவரில் எழுதி வைத்திருந்தார். இதன்படி, கதிஜல் உட்பட ஏழு பேர் மீது, கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us