ADDED : ஜூன் 25, 2024 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு : ''சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தல் குறித்து, கட்சி மேலிடத்துடன் இன்று ஆலோசனை நடத்தப்படும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னபட்டணா தொகுதியை, ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தருவதா அல்லது பா.ஜ., வேட்பாளரை களமிறக்குவதா என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை.
இரண்டு கட்சியினரும் சேர்ந்து ஆலோசனை நடத்துவோம். சென்னபட்டணா இடைத்தேர்தல் தொடர்பாக, கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்த, நாளை (இன்று) டில்லிக்குச் செல்கிறேன்.
தொகுதியில் காங்கிரஸ் சார்பில், யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். யார் எவ்வளவு வலுவானவர்களாக இருந்தாலும், மக்கள் மனது வைத்தால் என்னவாகும் என்பதை, பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி முடிவே, சாட்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.