sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : ஆக 03, 2024 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2024 11:13 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*நிஜ காதல் கதை

நடிகர் பிரேம், ஜோதியை திருமணம் செய்து 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இருவரும் பரஸ்பரம் காதலித்தனர். இவர்களின் காதல் கதை, மிகவும் சுவாரஸ்யமானது. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால், இருவரும் வீட்டை விட்டு ஓடினர். வாகனம் கிடைக்காததால் ஆம்புலன்சில் ஓடினர். கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பின், முறைப்படி பதிவு செய்தனர். இப்போது இவர்களை இரண்டு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு திருமணமான போது, பிரேம் ஹீரோவாகவில்லை. அதன்பின் வாய்ப்புகள் அதிகரித்து 'ஸ்டார்' அந்தஸ்து பெற்றார். இப்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவரது வாரிசுகளும் கூட, திரையுலகில் நுழைந்துள்ளனர். ஆகஸ்ட் 1ல் இந்த ஜோடி, திருமண ஆண்டு விழாவை கொண்டாடியது.

*போட்டோ ஷூட்

சில நடிகையர் கன்னடத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேறு மொழிகளில் அடையாளம் காணப்படுகின்றனர். ஐஸ்வர்யா ராய், ஷில்பா ஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி என, பல உதாரணங்களை கூறலாம். நடிகை நபா நடேஷ் சிக்கமகளூரின், சிருங்கேரியை சேர்ந்தவர். கன்னடத்தில் சில படங்களில் தலை காண்பித்தார். அழகும், திறமையும் இருந்தும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாய்ப்புக்காக காத்திராமல் தெலுங்குக்கு சென்றார். அங்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்பின் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் விபத்தில் சிக்கியதால், சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி, சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

* புதிய இயக்குனர்

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ரக்ஷித் ஷெட்டி, பல வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது இவரது தயாரிப்பில், இப்பனி தப்பித மளெயலி என்ற படம், திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. செப்டம்பரில் திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் திட்டமிட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு கிரண் ராஜ் இசை அமைத்ததுடன், பின்னணியும் பாடியுள்ளார். பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிரிக் பார்ட்டி உட்பட, ஹிட் படங்களில் வசனகர்த்தாவாக இருந்த சந்திரஜித், இப்பனி தப்பித மளெயலி படத்தின் மூலமாக இயக்குனராகி உள்ளார்.

* நீண்ட இடைவெளிக்கு பின்...

ஓ மனசே உட்பட சில படங்களை இயக்கிய உமேஷ்கவுடா, நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் திரையுலகுக்கு திரும்பி உள்ளார். காதல், ஆக்ஷன் கதை கொண்ட இந்த படத்தில், சந்தோஷ் நாயகனாகவும், அனுஷா ராய் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, பெலகாவி சுற்றுப்பகுதிகளில் 50 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இரண்டாம் கட்டத்தில் கேரளா, மங்களூரு, சக்லேஸ்புரா, சிக்கமகளூரில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படத்தில் சாதுகோகிலா, ஷோபராஜ், திவ்யா கவுடா என, பலர் நடிக்கின்றனர்.

* நாயகன் தர்ஷன் ரசிகர்

நடிகர் தர்ஷனுக்கு, திருப்பு முனையை ஏற்படுத்திய படம் மெஜஸ்டிக். இது போன்ற ரவுடிசம் கதை கொண்ட, மெஜஸ்டிக் 2 திரைப்படம் தயாராகிறது. இந்த படத்தில், ஷெட்டுக்கு செல்லலாம் வா என்ற வரிகளில் துவங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் கைதான பின், 'ஷெட்' என்ற வார்த்தை மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. ரேணுகாசாமியை ஷெட் ஒன்றில் அடைத்து வைத்து, தர்ஷன் கேங் சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது. தற்போது பாடல் ஒன்றுக்கு, இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். படத்தை இயக்கி ராமு, இந்த பாடலை எழுதினாராம். தயாரிப்பாளரும், பட வினியோகஸ்தருமான ஷில்பா சீனிவாசின் மகன் பரத், இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். படத்தில் தர்ஷனின் ரசிகராக தோன்றுகிறார்.

*இரட்டை இயக்குனர்கள்

நடிகை சுக்ருதா வாக்ளே, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கபடி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. நடிகர் கிருஷ்ணா டீசர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். தயாள் பத்மநாபன் தயாரிக்கும் இந்த படத்தை, ரவிகிரண், சேத்தன் இணைந்து இயக்குகின்றனர். தயாள் பத்மநாபன் ஏற்கனவே பத்து கன்னடம், இரண்டு தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இவற்றில் 11 படங்களை இவரே இயக்கினார். ஆனால் கபடி படத்தில் தயாரிப்பு பொறுப்பை மட்டும் ஏற்றுள்ளார். ஆகஸ்ட் 23ல் திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us