sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சினிகடலை

/

சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : செப் 06, 2024 05:52 AM

Google News

ADDED : செப் 06, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆடியது நானா

கன்னட திரை ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை மாலாஸ்ரீ, நீண்ட இடைவெளிக்கு பின், பாடல் ஒன்றுக்கு அற்புதமாக நடனம் ஆடினார். ராமு இயக்கும் மெஜஸ்டிக் -2 படத்தில், ஒரு பாடலுக்கு மாலாஸ்ரீ நடனமாடினார். இதுகுறித்து மாலாஸ்ரீ கூறுகையில், “மெஜஸ்டிக் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்துக்கு வந்துள்ளது. படத்தின் ஒரு பாடலில் நாயகன் பரத், நுாற்றுக்கணக்கான டான்சர்களுடன் நடனமாடுகிறார். இவர்களுடன் அவரும் அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளார். சமீபத்தில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நன்றாக வந்துள்ளது. என் நடனத்தை கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. 'நான் தானா அப்படி ஆடினேன்' என்ற சந்தேகம் எற்பட்டது,'' என்றார்.

* குறைந்தது 10 கிலோ எடை

பாரு பார்வதி என்ற திரைப்படம் மூலமாக, நடிகை தீபிகா தாஸ் சின்னத்திரையில் இருந்து, மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்துள்ளார். இது தொடர்பாக, தயாரிப்பாளர் பிரேம் நாத்திடம் கேட்டபோது, ''சிறு வயதில் இருந்து, நான் சினிமா பார்த்து வந்தேன். எனக்கு சினிமா தயாரிக்கும் கனவு ஏற்பட்டது. இப்போது பாரு பார்வதி படத்தை தயாரிக்கிறேன். பாயல் என்ற கதாபாத்திரத்தில் தீபிகா தாஸ் நடிக்கிறார். நிஜ வாழ்க்கையில் சாகசங்களில் செய்வதில், ஆர்வம் கொண்ட இவருக்காகவே உருவான கதாபாத்திரம் போன்றுள்ளது. இந்த படத்தில் புது விதமான தீபிகா தாசை பார்க்கலாம். படத்துக்காக அவர் ஒரே மாதத்தில், 10 கிலோ உடல் எடையை குறைத்தார். நீளமான தலைமுடியை வெட்டி, குட்டையாக்கி கொண்டார். பெங்களூரு, கோவா, உத்தரகண்ட், மஹாராஷ்டிராவில் படப்பிடிப்பு நடந்துள்ளது,'' என்றார்.

* ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் கதை கொண்ட, ரம்மி ஆட்டா படத்தின் டீசர், சமீபத்தில் வெளியானது. கதை குறித்து படக்குழுவினர் கூறுகையில், ''சூதாட்டம் காரணமாக, மஹாபாரதத்தில், பெரும் யுத்தமே நடந்தது. மன்னர்கள் பலர் சூதாட்டத்தால், நாடு உட்பட அனைத்தையும் இழந்த உதாரணங்கள் உள்ளன. இது போன்ற சூதாட்டத்தால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, இந்த படத்தில் விவரித்துள்ளோம். இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால், பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன. இது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை கொண்டது. ராகவ் சூர்யா, சையத் இர்பான் நாயகனாக நடித்துள்ளனர்,'' என்றார்.

* மகனுக்காக வந்த தந்தை

தமிழ், கன்னடம் என, பல்வேறு மொழிகளில் வில்லனாக மிரட்டியவர் ரவிசங்கர். இவரது மகன் ஆத்வா, திரையுலகில் அறிமுகமாகிறார். இது குறித்து, படக்குழுவினரிடம் கேட்ட போது, ''சுப்ரமண்யா என்ற படத்தில் ஆத்வா நாயகனாக நடிக்கிறார். 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனரும் ரவிசங்கர்தான். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, துர்கி படத்தை இயக்கினார். அதன்பின் இப்போதுதான், தன் மகனுக்காக ஆக்ஷன், கட் கூற வந்துள்ளார். பல வெற்றிப்படங்களுக்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர், இப்படத்துக்கும் இசை அமைத்துள்ளார்,'' என்றனர்.

*டைட்டில் மாற்றம்

சந்தன் ஷெட்டி, நிவேதிதா நட்சத்திர ஜோடி, தங்கள் திருமணத்துக்கு முன், கேண்டி கிரஷ் என்ற படத்தை ஒப்புக்கொண்டனர். தற்போது படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து, இயக்குனர் புனித் கூறுகையில், ''முதலில் இந்த படத்துக்கு, கேண்டி கிரஷ் என பெயர் சூட்டினோம். ஆனால் இதே பெயரில் உள்ள நிறுவனம், படத்தின் டைட்டிலை மாற்றும்படி நோட்டீஸ் அனுப்பியது. நாங்கள் விளக்கம் அளித்தும், நிறுவனம் சம்மதிக்கவில்லை. எனவே படத்தின் டைட்டிலை மாற்றி, முத்து ராக்ஷசி என வைத்தோம். பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். இன்னும் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு பாக்கியுள்ளது,'' என்றார்.

* நல்லதை நினைத்தால்...

வீட்டுமனை மற்றும் நிலத்துக்கு, அரசு சர்வே எண் கொடுத்திருக்கும். தற்போது சர்வே எண் 45 என்ற படம் திரைக்கு வர தயாராகிறது. மூத்த இயக்குனர் வாசு, முதல் காட்சியை கிளாப் அடித்து படக்குழுவினரை வாழ்த்தினார். படத்தின் கதை குறித்து, இயக்குனர் சிவகுமார் ஷெட்டிஹள்ளி கூறுகையில், ''கெட்டதை செய்ய முற்பட்டால், அசம்பாவிதங்கள் நடக்கும்; நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்பதே, கதையின் சாராம்சமாகும். மைசூரு, மாண்டியா, ஹாசனில் இரண்டு கட்டங்களில் படப்பிடிப்பு நடக்கும். சந்தோஷ், ரியா பாஸ்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us