sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சினி கடலை

/

சினி கடலை

சினி கடலை

சினி கடலை


ADDED : ஆக 29, 2024 10:52 PM

Google News

ADDED : ஆக 29, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ரூ.13 கோடி பரிமாற்றம்

பெரும்பாலும் புதியவர்களே நடித்துள்ள, டாலர்ஸ் பேட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இம்மாதம் செப்டம்பர் 6ல் திரைக்கு வருகிறது. படத்தின் கதை குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'இது கிரைம், திரில்லர் கதை கொண்டது. தமிழக வங்கி ஒன்றின் மானேஜர், எதிர்பாராமல் 13 கோடி ரூபாயை நுாறு பேரின் கணக்கில் செலுத்துகிறார். அவர் பணம் செலுத்த என்ன காரணம்; பணம் திரும்ப கிடைக்கிறதா என்பதை திரையில் காண வேண்டும். படத்தில் சவும்யா ஜெகன் மூர்த்தி, வெங்கட் ராவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிருத்வி ஆம்பர், கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்' என்றனர்.

* 'சேலஞ்சிங்' கதாபாத்திரம்

அபூர்வா படத்தின் மூலமாக, கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அபூர்வா. அதன்பின் திரும்பி பார்க்க முடியாத அளவுக்கு பிஸியானார். பல வெற்றி படங்களில் நடித்தார். நடிப்புடன் நிற்காமல், ஓ நன்ன சேத்தனா என்ற படத்தை இயக்கி உள்ளார். தற்போது கனஞ்சாரு என்ற படத்தில் நடிக்கிறார்.

கதை குறித்து அபூர்வாவிடம் கேட்ட போது, ''இந்த படத்தில் நான் சில காட்சிகளில் மட்டும் தோன்றினாலும், கதைக்கு என் கதாபாத்திரமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பாடல் காட்சியிலும் நடித்துள்ளேன். என் நடிப்பில் ராணி உட்பட ஐந்து படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வரும். ஒவ்வொன்றிலும் சேலஞ்சிங்கான கதாபாத்திரம். நடிப்புக்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களாகும்,'' என்றார்.

* 'டிஜிட்டல்' மேடையில் ரிலீஸ்

கடந்த 2016ல், ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு, சவுரவ் சுக்லா 1888 என்ற படம் தயாரானது. இந்த படத்தை பல டிஜிட்டல் வழிகளில் பார்க்கலாம். இதில் நீது நாயகியாக நடித்துள்ளார்.

இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'ஆப்பிள் டிவி, யு டியூப், புக் மை ஷோ உட்பட, மற்ற டிஜிட்டல் மேடைகளில் படம் ஒளிபரப்பாகிறது. இந்த படம் மூன்று கதாபாத்திரங்களை சுற்றிலும் நடக்கும் கதையாகும். இது குறைந்த பட்ஜெட் படமாகும். படத்தை பற்றி பெரிய அளவில் பிரசாரம் செய்ய எங்களுக்கு வசதி இல்லை. எனவே நேரடியாக டிஜிட்டல் மேடைகளில், படத்தை வெளியிட்டோம். ஏற்கனவே, பல விருதுகளை பெற்றுள்ளது. நண்பர்கள் சேர்ந்து படத்தை தயாரித்து உள்ளோம்' என்றனர்.

* சூதாட்டத்தின் பின்விளைவுகள்

ஆன்லைனில் ரம்மி, சூதாட்டம் விளையாடி பலர் வீதிக்கு வந்துள்ளனர். ரம்மி ஆடாதீர்கள் என, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல வீடியோக்களை, சோஷியல் மீடியாவில் காணலாம். தற்போது ரம்மி தொடர்பான படம், திரைக்கு வர தயாராகிறது.

தயாரிப்பாளர் உமர் ஷெரிப் கூறுகையில், ''பொழுது போக்காக ஆரம்பித்த ஆன்லைன் சூதாட்டம், பலரின் வாழ்க்கையை வீதிக்கு கொண்டு வந்துள்ளது. இதனால், சில சந்தர்ப்பங்களில் அதிக லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் நஷ்டமும் ஏற்படும். இந்த விளையாட்டுக்கு அரசே அனுமதி அளித்துள்ளது. நடிகர், நடிகையரே பிரசாரம் செய்வதால், மக்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதன் பின் விளைவுகளை காண்பித்து உள்ளோம். பெங்களூரு சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். ஸ்நேஹா ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,'' என்றார்.

* புதிய அத்தியாயம்

இயக்குனர் மன்சூரே, தற்போது துார தீர யானா என்ற படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக பிரியங்கா குமார் நடித்துள்ளார். கதை குறித்து இயக்குனர் மன்சூரேவிடம் கேட்ட போது, ''இது அழகான, மாறுபட்ட காதல் கதை. என் திரையுலக பயணத்தில், இது புதிய அத்தியாயம் என்றே கூறலாம். அதிகமான ரசிகர்களை சென்றடையலாம் என நினைத்து, இம்முறை காதல் கதையை தேர்வு செய்து கொண்டேன். பெங்களூரில் இருந்து கோவாவுக்கு செல்லும் நாயகனும், நாயகியும் காதலில் விழுவர். விஜய் கிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். படத்தில் ஆறு பாடல்கள் இருக்கும். பகேஷ் மற்றும் கார்த்திக் இசை அமைத்துள்ளனர்,'' என்றார்.

* அப்பாவி நாயகன்

கடந்த 20 ஆண்டுகளாக, நடிகராக, உதவி இயக்குனராக அடையாளம் காணப்பட்டவர் ஓம் பிரகாஷ். தற்போது குரி காயோனு என்ற படத்தின் மூலமாக, இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அது மட்டுமின்றி நாயகனும் இவரே.

இது குறித்து அவர் கூறுகையில், ''சமீபத்தில், எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் பட டைட்டில் வெளியிட்டு வாழ்த்தினார். ராஜேஷும், பிரியாவும் படத்தை தயாரிக்கின்றனர். நாயகன் அப்பாவி. வெளி உலகம் தெரியாத அவர் சந்திக்கும் பிரச்னைகளை படத்தில் காண்பித்துள்ளோம். கோலார், மலை மஹாதேஸ்வரா மலை, அந்தரகங்கே பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளோம். நாயகி உட்பட, மற்ற கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை,'' என்றார்.

**






      Dinamalar
      Follow us