பஞ்சாப் எல்லையில் சீன டிரோன்: பிஎஸ்எப் வீரர்கள் மீட்பு
பஞ்சாப் எல்லையில் சீன டிரோன்: பிஎஸ்எப் வீரர்கள் மீட்பு
UPDATED : மே 12, 2024 11:08 PM
ADDED : மே 12, 2024 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எப்) மீட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் டிரோன் நடமாட்டம் இருப்பதாக எல்லைப்பாதுகாப்பு படையின் புலானாய்வு பிரிவினர் தகவல் அளித்தனர். இதனையடுத்து டிரோனை கண்காணிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது அமிர்தசரஸ் மாவட்டம் ஹவேலியன் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் கிடந்த டிரோனை மீட்டனர். இது சீனாவி்ல் தயாரிக்கப்பட்ட டிஜேஐ மேவிக்3 கிளாசிக் வகை டிரோன் என அடையாளம் காணப்பட்டது.