சி.ஐ.எஸ்.எப் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது பார்லி.,பாதுகாப்பு
சி.ஐ.எஸ்.எப் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது பார்லி.,பாதுகாப்பு
UPDATED : மே 19, 2024 08:02 PM
ADDED : மே 19, 2024 07:58 PM

புதுடில்லி : நாளை (20 ம் தேதி ) முதல் பார்லி.,பாதுகாப்பு கட்டமைப்பு சி.ஆர்.பிஎப் வசம் இருந்து சி.ஐ.எஸ்.எப் வசம் மாறுகிறது.
கடந்த 2001 ம் ஆண்டு பழைய பார்லி கட்டடத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்தனர். இச்சம்பவத்தில் பார்லி.,பணியாளர் ஒருவர் பலியானார். தொடர்ந்து 2023-ம் ஆண்டிலும் புதிய பார்லி.,கட்டடத்திற்குள்ளும் மர்ம நபர்கள் நுழைந்தனர். இந்த சம்பவங்களை அடுத்து சி.ஆர்.பி.எப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தினர். இதற்காக 1,400 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் சி.ஆர்.பி.எப். அமைப்பிடம் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பார்லியை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வமைப்பில் 3.300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சி.ஐ.எஸ்.எப் பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக பார்லி வளாகத்தை நன்கு அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு பதவியேற்கும் போது முழு அளவில் பாதுகாப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்லியை பாதுகாக்கும் பணியில் இதுவரையில் சி.ஆர்.பி.எப், டில்லி போலீஸ் மற்றும் பார்லி., பாதுகாப்பு ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர் இவர்கள் அனைவரும் வாபஸ் பெறப்பட்டு உள்ளனர் என சி.ஐ.எஸ்.எப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

