ADDED : ஆக 29, 2024 01:29 AM
பனஜி, : கோவாவில் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முதல் இந்திய குடியுரிமை சான்றிதழை, பாகிஸ்தானில் இருந்து வந்த கிறிஸ்துவர் பெற்றுக் கொண்டார்.
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014 டிச., 31க்கு முன் நம் நாட்டுக்கு வந்த முஸ்லிம் அல்லாத ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு, குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை மத்திய அரசு வழங்கி வருகிறது.
நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், கோவாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற கிறிஸ்துவர் ஜோசப் பிரான்சிஸ் பெரைரா அங்கேயே படித்து கராச்சியில் பணியாற்றினார்.
கோவா பெண் மரியாவை திருமணம் செய்திருந்தாலும், பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற அவர் ஓய்வுபெற்ற பின் கடந்த 2013ல் கோவா திரும்பினார்.
எனினும் ஜோசபுக்கு இந்திய குடியுரிமை பெறுவது சவாலாக இருந்தது. இந்நிலையில், 78 வயதான ஜோசபுக்கு, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று இந்திய குடியுரிமை சான்றை வழங்கினார்.

