ADDED : ஏப் 13, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஜியாபாத்:புதுடில்லி அருகே, 11ம் வகுப்பு மாணவர் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
டில்லி அருகே காஜியாபாத் இந்திராபுரம் ஏ.டி.எஸ்., அட்வான்டேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் நவ் கண்ணா, 17. நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு, குடியிருப்பின் 24வது மாடியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
திடீரென அங்கிருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அவர், மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், நவ் கண்ணா மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். அவர் சட்டைப் பையில் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதம் இருந்தது.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.

