முதல்வர் பதவி சர்ச்சை: காங்., - எம்.எல்.ஏ., கருத்து
முதல்வர் பதவி சர்ச்சை: காங்., - எம்.எல்.ஏ., கருத்து
ADDED : ஜூலை 01, 2024 09:16 PM

ராம்நகர் : ''முதல்வர் மாற்றம் குறித்து, சாலையில் நடந்து செல்பவர்கள் போன்று பேச வேண்டாம். கட்சியின் மூத்த தலைவர்களின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும்,'' என, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா வலியுறுத்தினார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் மாற்றம் குறித்து, சாலையில் நடந்து செல்பவர்கள் போன்று பேச வேண்டாம். கட்சியின் மூத்த தலைவர்களின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
நான், யாரையும் முதல்வராக்க போவதில்லை, யாரையும் நீக்க போவதில்லை. முதல்வர் பதவி குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். விஸ்வ ஒக்கலிக மஹா சமஸ்தான மடத்தின் ஜெகத்குரு சந்திரசேகர சுவாமிகள், முதல்வர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். அவர்களை பற்றி அரசியல்வாதிகள் பேசக்கூடாது. சுவாமிகளின் அறிக்கை குறித்து விமர்சிப்பது சரியல்ல.
அனைத்து சமுதாயத்தை சேர்ந்த சுவாமிகளும், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வேண்டும் என்று கருத்து கூறுவது இயல்பு. எனவே, அரசியல்வாதிகள், தங்கள் வரம்புக்குள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.