ஹரிபிரசாத்துக்கு முதல்வர் பதவி: பிரணவானந்த ஸ்ரீ வலியுறுத்தல்
ஹரிபிரசாத்துக்கு முதல்வர் பதவி: பிரணவானந்த ஸ்ரீ வலியுறுத்தல்
ADDED : ஜூன் 30, 2024 10:36 PM

யாத்கிர்: ''கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் இருந்தால் காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத்துக்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்,'' என ராஷ்டிரிய ஈடிகா மகாமண்டல தலைவர் பிரணவானந்த ஸ்ரீ தெரிவித்தார்.
இந்நிலையில், யாத்கிரில் நேற்று பிரணவானந்த ஸ்ரீ அளித்த பேட்டி:
ஈடிகா சமூகம் மாநிலத்தில் தனி அரசியல் ஆதிக்கம் கொண்டுள்ளது. முதல்வர் பதவியில் மாற்றம் இருந்தால், ஹரிபிரசாத்துக்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். இவை கிடைக்கவில்லை என்றால், அவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும்.
காங்கிரசின் தீவிர விசுவாசி ஹரிபிரசாத். கட்சியின் இக்கட்டான சூழ்நிலையிலும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கவுரவம் அளிக்க வேண்டும். லோக்சபா தேர்தலுக்கு பின், மாநிலத்தில் முதல்வர் மாற்றம் காற்று பலமாக வீசுகிறது. முதல்வரை மாற்றலாமா, வேண்டாமா என்று உயர்மட்டத்தில் ஆலோசித்து வருகிறது.
முதல்வர் மாற்றம் ஏற்பட்டால், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. லிங்காயத்கள் முல்வராக வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தலித்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அவர்களுக்கு முதல்வர் வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.