ADDED : மே 29, 2024 09:19 PM

தாவணகெரே: நரசிம்ம சுவாமி - மஞ்சுநாதா சுவாமி கோவில், உண்டியல் காணிக்கையாக 46.77 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது.
தாவணகெரே ஹொன்னாளி தாலுகா சுங்கடகத்தே கிராமத்தில் உள்ள, நரசிம்ம சுவாமி - மஞ்சுநாதா சுவாமி கோவில் கர்நாடக அரசின் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. இந்த கோவிலில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
நேற்று முன்தினம் ஹொன்னாளி தாசில்தார் புரந்தர் ஹெக்டே தலைமையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி நரசிம்மமூர்த்தி, கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காணிக்கையாக 46 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வசூலாகி உள்ளது. “காணிக்கை வங்கியில் டிபாசிட் செய்யப்படும். கோவிலில் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவைப்பட்டால் பயன்படுத்தப்படும்,” என, தாசில்தார் புரந்தர் ஹெக்டே கூறினார்.