தேர்தல் பணிக்கு வராத அதிகாரி கைது செய்ய கலெக்டர் உத்தரவு
தேர்தல் பணிக்கு வராத அதிகாரி கைது செய்ய கலெக்டர் உத்தரவு
ADDED : மார் 22, 2024 05:50 AM
பீதர்: பீதரில் தேர்தல் பணிக்கு வராத அதிகாரியை கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மாநிலம் முழுதும் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து, அரசு அதிகாரிகள், போலீசார் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பீதர் ஹும்னபாத் தாலுகா கோடம்பல் பகுதியில் திறக்கப்பட்டு உள்ள, சோதனைச் சாவடியின் பொறுப்பாளராக, பீதர் சிட்டகுப்பா தாலுகா அலுவலக அதிகாரி முகமது சலீம் நியமிக்கப்பட்டு இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர், தேர்தல் பணிக்கு வரவில்லை. இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இதுபற்றி கலெக்டர் கோவிந்த் ரெட்டியின் கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து முகமது சலீமை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கைது செய்ய, கோவிந்த் ரெட்டி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

