ADDED : ஜூன் 04, 2024 04:21 AM

பெங்களூரு : கல்லுாரி மாணவி கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசார் தயாராகி வருகின்றனர்.
பெங்களூரு சுப்பிரமணியபுரா பிருந்தாவன் லே - அவுட்டில் வசிப்பவர் சவுமியா. இவரது மகள் பிரபுத்யா, 22. தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., படித்தார்.
கடந்த மாதம் 15ம் தேதி, கை நரம்பு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், வீட்டின் குளியல் அறையில் இறந்து கிடந்தார். விசாரணையில் பிரபுத்யா கொலையானது தெரிந்தது.
பிரபுத்யா தம்பியின் நண்பரான 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். பிரபுத்யாவிடம் இருந்து, கைதான சிறுவன் 2,000 ரூபாய் திருடினார். இதுபற்றி பெற்றோரிடம் சொல்வதாக பிரபுத்யா மிரட்டியதால், அவரை சிறுவன் கொன்றது தெரிந்தது. சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, சுப்பிரமணியபுரா போலீசார் தயாராகி வருகின்றனர். சாட்சி, ஆதாரங்களை திரட்டும் பணியில், மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.