ADDED : செப் 13, 2024 07:55 AM

ஹென்னுார்: பைக் வாங்க முடியாததால், கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு தனிசந்திராவை சேர்ந்தவர் அய்யப்பன், 20; தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்தார். இவரது தந்தை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாயுடன் வசித்தார். வீட்டு வேலை செய்து மகனை, தாய் படிக்க வைத்தார். கடந்த இரண்டு மாதங்களாக, கல்லுாரி செல்ல புதிய பைக் வாங்கி தரும்படி, தாயிடம், மகன் அடிக்கடி கேட்டு வந்து உள்ளார்.
பொருளாதார நிலையை காரணம் காட்டி, பைக் வாங்கி தர, தாய் மறுத்து உள்ளார்.
ஆனாலும் மகன் பிடிவாதமாக இருந்து உள்ளார். இதனால் வேறு வழியின்றி மகனுக்கு பைக் வாங்கி தர, தாய் ஒரு இடத்தில் 50,000 ரூபாய் கடன் கேட்டு இருந்தார். இதுபற்றி அய்யப்பனுக்கு தெரியாது.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல, தாய் வேலைக்கு சென்றார். கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த, அய்யப்பன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹென்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.