sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பிய வண்ணமயமான புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு

/

ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பிய வண்ணமயமான புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு

ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பிய வண்ணமயமான புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு

ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பிய வண்ணமயமான புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு

1


ADDED : ஜூன் 10, 2024 01:30 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:30 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மே மாதத்தின் போது சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களை பதிவு செய்து, இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. இந்த வண்ணமயமான படங்களை இன்று (ஜூன் 10) இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023ம் ஆண்டு செப்., 2ம் தேதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தாண்டு (2024) ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.

சமீபத்தில், ஆதித்யா -எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி இருந்தது. இந்நிலையில், மே மாதத்தின் போது சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களை பதிவு செய்து, ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. இந்த படங்களை இன்று (ஜூன் 10) இஸ்ரோ எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. புகைப்படங்கள் சூரியனின் ஆற்றல்மிக்க செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது.






      Dinamalar
      Follow us