உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 19, 2024 04:54 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு : ''உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சமுதாயத்தின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதும் முக்கியம்,'' என, பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் டாக்டர் மஞ்சுநாத் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
உடலின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, சமுதாயத்தின் ஆரோக்கியத்தையும் காப்பாற்ற வேண்டும்.
உடல் நலனில் மட்டும் அக்கறை காண்பித்தால் போதாது.
சமுதாயத்தின் நலனிலும் அக்கறை காண்பிப்பது, ஒவ்வொரு பிரஜை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பாகும். அடுத்த சந்ததியினருக்கு, வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது, என் கருத்து.
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, எட்டு சட்டசபை தொகுதிகளிலும் எங்களுக்கு, நல்ல செல்வாக்கு உள்ளது. மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
