உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 25, 2024 11:23 PM

அ நிறம் | அளவு
சாம்ராஜ்நகர்: மதுபான கவர்களின் மீது, சாம்ராஜ்நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுனில் போசின் போட்டோ உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதியில், அமைச்சர் மஹாதேவப்பாவின் மகன் சுனில் போஸ், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக, முதல்வர் சித்தராமையா உட்பட அமைச்சர்கள், தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் காங்கிரசார், வாக்காளர்களுக்கு மதுபானம் வினியோகித்ததாக கூறப்பட்டது. மதுபான கவர் மீது, சுனில் போசின் படம் உள்ள லேபிள் ஒட்டப்பட்டுள்ளது.
இது சமூக வலைதளத்தில் நேற்று பரவியது. 'ஓட்டுக்காக மதுபானம் கொடுத்து வாக்காளர்களை ஈர்க்க நினைப்பது சரியல்ல. இது பற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பலரும் வலியுறுத்துகின்றனர்.
