ADDED : ஜூன் 15, 2024 04:22 AM

விஜயபுரா: 'வளர்ச்சி பணிகளுக்கான நிதி ஒதுக்காவிட்டால், எனது பதவியை ராஜினாமா செய்வேன்,'' என்று, முத்தேபிஹால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாடகவுடா, மிரட்டல் விடுத்துள்ளார்.
விஜயபுரா முத்தேபிஹால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாடகவுடா அளித்த பேட்டி:
அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களால், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குவது இல்லை. தொகுதியை வளர்ச்சி அடைய வைக்க முடியாவிட்டால் எம்.எல்.ஏ.,வாக இருந்து என்ன பயன். மக்கள் என்னை நம்பி தான் ஓட்டு போட்டுள்ளனர்.
கர்நாடகாவின் வட மாவட்டங்கள் ஏற்கனவே வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது. தற்போது வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்காததால், மோசமான நிலையில் உள்ளது.
எனது தொகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ய, அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன். சில வளர்ச்சி அடைந்த தொகுதிகளுக்கு, மீண்டும், மீண்டும் அரசு நிதி ஒதுக்குகிறது.
ஆனால் என்னைப் போன்றவர்கள் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் வட மாவட்டத்தில் சில தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவது இல்லை. நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

