வெற்றி பெற்றவர்கள் மீது வழக்கு சரியல்ல என்கிறார் காங்., - எம்.பி.,
வெற்றி பெற்றவர்கள் மீது வழக்கு சரியல்ல என்கிறார் காங்., - எம்.பி.,
ADDED : செப் 01, 2024 11:50 PM

தாவணகெரே: ''தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மீது பொய் வழக்கு போடுவது சரியல்ல,'' என காங்கிரஸ் எம்.பி., பிரபா மல்லிகார்ஜுன் தெரிவித்தார்.
தேர்தல் விதிமீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்படி, காங்கிரஸ் எம்.பி., பிரபாவுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இது தொடர்பாக, தாவணகெரேயில் அவர் கூறியதாவது:
இதுவரை எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. அவர் (காயத்ரி சித்தேஸ்வர்) தேர்தலில் தோல்வி அடைந்ததால், என்மீது குற்றச்சாட்டு சுமத்துகிறார். உண்மை என்ன என்பது வாக்காளர்களுக்கு தெரியும்.
தேர்தல் அறிக்கையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், எத்தகைய பணிகள் மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளது. இது மாநில அரசின் திட்டமல்ல. தேர்தல் அறிக்கையை நன்கு தெரிந்து கொண்ட பின்னரே, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் எங்களுக்கு ஓட்டு போட்டு உள்ளனர்.
தேர்தல் நேரத்தில் ஆட்சேபனை தெரிவிக்காமல், தோல்வி அடைந்த பின் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.