ADDED : மே 06, 2024 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொப்பால், : கொப்பால் அருகே உள்ளது ஏலமகேரி கிராமம். நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் தொண்டர்கள் எட்டு பேர், கொப்பால் காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகர் ஹிட்னாலை ஆதரித்து, ஏலமகேரி கிராமத்தில் பிரசாரம் செய்தனர். வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
இந்நிலையில் விவசாயியான தியாமண்ணா பாலனகவுடா, 45 என்பவரின் வீட்டிற்கும் சென்று, ராஜசேகர் ஹிட்னாலை ஆதரிக்கும்படி கேட்டனர். அப்போது பா.ஜ.,வுக்கு ஓட்டு போட போவதாக, தியாமண்ணா கூறி உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள், தியாமண்ணாவை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து, சாலையில் வைத்து தாக்கிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் கொப்பால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
தாக்குதல் நடத்திய எட்டு பேரை, கொப்பால் ரூரல் போலீசார் தேடுகின்றனர்.