தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ காங்., 'சொம்பு' விளம்பரம் பா.ஜ., 'டேஞ்சர்' பதிலடி

காங்., 'சொம்பு' விளம்பரம் பா.ஜ., 'டேஞ்சர்' பதிலடி

காங்., 'சொம்பு' விளம்பரம் பா.ஜ., 'டேஞ்சர்' பதிலடி


ADDED : ஏப் 23, 2024 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு, : லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே, விளம்பர குஸ்தி வெகு ஜோராக நடக்கிறது. காங்கிரசின் 'சொம்பு' விளம்பரத்துக்கு போட்டியாக, 'டேஞ்சரஸ்' என்ற விளம்பரத்தை பா.ஜ., கொடுத்துள்ளது.

லோக்சபா தேர்தலின், முதற்கட்ட ஓட்டுப்பதிவுக்கு, இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்காளர்களை தங்கள் வசம் ஈர்க்க, அந்தந்த கட்சி வேட்பாளர்கள் முட்டி மோதுகின்றனர். சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்த தயங்குவதில்லை. பரஸ்பரம் கிண்டலாக, அவமதிப்பாக விமர்சிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், 'பேசிஎம்' என்ற போஸ்டரை வெளியிட்டது. இது தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோன்ற வழியை, லோக்சபா தேர்தலுக்கும் காங்கிரஸ் கையாள்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசு, கர்நாடகாவுக்கு காலி சொம்பு கொடுத்துள்ளது என சொம்பு படத்துடன் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளது. இது சமூக வலைதளத்திலும் பரவியது.

இதற்கு பதிலடியாக, ஒன்பது காரணங்களுடன், 'காங்கிரஸ் டேஞ்சரஸ்' என்ற பெயரில், முக்கியமான நாளிதழ்கள், சமூக வலைதளங்களில் நேற்று பா.ஜ., பதிலடி விளம்பரம் கொடுத்துள்ளது. 'கன்னடர்களின் கைகளில் தேங்காய் ஓடு கொடுத்த காங்கிரஸ்' எனவும் அதில், விமர்சித்துள்ளது. சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் விபரம்:

l தலித்துகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணம், மற்றவருக்கு சேர வேண்டுமா?

l ஹோட்டலுக்கு டீ குடிக்க சென்ற அப்பாவிகள், குண்டு வெடிப்புக்கு பலியாக வேண்டுமா?

l ஆட்டோவில் செல்லும் பயணியர், குக்கர் வெடிகுண்டுக்கு பலியாக வேண்டுமா?

l கல்லுாரிக்கு செல்லும் இளம்பெண்கள், 'லவ் ஜிஹாத்'துக்கு ஆளாக வேண்டுமா?

l கன்னடர்களின் காவிரி தண்ணீர், வேறு மாநிலத்துக்கு செல்ல வேண்டுமா?

l அப்பாவி மக்கள், நக்சல்களுக்கு பலியாவதை பார்க்க வேண்டுமா?

l மேய செல்லும் கோமாதா கசாப்பு கடைக்கு செல்ல வேண்டுமா?

l விதான் சவுதாவுக்கு செல்லும் போது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை கேட்க வேண்டுமா?

'எச்சரிக்கை... பாதுகாப்புக்கு தாமரை பட்டனை அழுத்துங்கள்' என, அந்த விளம்பரத்தில் பா.ஜ., குறிப்பிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us