ஏழைகளை பாதுகாக்க தவறியதாக ஆம் ஆத்மி அரசு மீது காங்., புகார்
ஏழைகளை பாதுகாக்க தவறியதாக ஆம் ஆத்மி அரசு மீது காங்., புகார்
ADDED : ஆக 07, 2024 10:20 PM

பட்லி:ஏழைகளை பாதுகாக்க ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாக டில்லி காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
பட்லி சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பால்ஸ்வா பால்பண்ணை பகுதிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் நேற்று சென்றார். அங்கு குடியிருப்புகளை இழந்து தவிக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஏழைகளை பாதுகாக்க ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. ஏழை மக்களுடன் டில்லி காங்கிரஸ் துணை நிற்கிறது. உங்கள் வீடுகளை அழிக்க விட மாட்டோம்.
குடிசைப் பகுதிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற டில்லி உயர்நீதிமன்ற உத்தரவு, ஏழைகளின் வாழ்வில் கடுமையான உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள், வீடுகள் மற்றும் கண்ணியத்திற்காக டில்லி காங்கிரஸ் போராடும்.
அரசாங்கத்தின் இரக்கமற்ற கொள்கையால், ஏழை மக்கள் இடம்பெயர்வதற்கு இடமளிக்க மாட்டோம். ஒவ்வொரு அடியிலும் பால்ஸ்வா பால் பண்ணையின் குடும்பங்களுடன் நாங்கள் நின்றுள்ளோம், தொடர்ந்து நிற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.