ADDED : ஜூன் 27, 2024 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: நாகேந்திரா ராஜினாமாவால் காலியான ஒரு அமைச்சர் பதவிக்கு, காங்கிரசில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கர்நாடக இளைஞர் நலன் பழங்குடியினர் நலன், விளையாட்டு துறை அமைச்சராக இருந்தவர் நாகேந்திரா. பழங்குடியினர் நல துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, சந்திரசேகர் என்ற அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தில் நாகேந்திரா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடமிருந்த மூன்று துறைகளும் தற்போது முதல்வர் வசம் உள்ளது. நாகேந்திரா ராஜினாமாவால் காலியான ஒரு அமைச்சர் பதவிக்கு, காங்கிரசில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஒக்கலிகர், லிங்காயத், எஸ்.சி., சமூக அமைச்சர்கள் தங்கள் சமூகங்களுக்கு, அந்த ஒரு அமைச்சர் பதவியை தர வேண்டும் என்று, முதல்வருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.