sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரோஹித் சர்மா குறித்து காங்., பிரமுகர் விமர்சனம்; ராகுலை குறிவைத்து பா.ஜ., பதிலடி

/

ரோஹித் சர்மா குறித்து காங்., பிரமுகர் விமர்சனம்; ராகுலை குறிவைத்து பா.ஜ., பதிலடி

ரோஹித் சர்மா குறித்து காங்., பிரமுகர் விமர்சனம்; ராகுலை குறிவைத்து பா.ஜ., பதிலடி

ரோஹித் சர்மா குறித்து காங்., பிரமுகர் விமர்சனம்; ராகுலை குறிவைத்து பா.ஜ., பதிலடி


ADDED : மார் 04, 2025 12:28 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விமர்சித்தது, அக்கட்சிக்கு எதிராகவே திரும்பியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை குறிவைத்து, பா.ஜ., கடுமையான பதில் தாக்குதலை தொடர்ந்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், ஒரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காக இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்து, அக்கட்சிக்கு எதிராக திரும்பியுள்ளது.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், ஷாமா முகமது வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:


விளையாட்டு வீரர்கள் நல்ல உடல்தகுதியுடன் இருக்க வேண்டும். ஆனால், ரோஹித் சர்மா குண்டாக உள்ளார். அவர் எடையை குறைக்க வேண்டும். மேலும் இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த கேப்டன்களுடன் ஒப்பிடுகையில், இவருக்கு எந்தத் தகுதியும் இல்லை.

மெச்சத்தக்க வகையில் அப்படி அவர் என்ன பெரிய சாதனையை புரிந்துவிட்டார்? அவர் ஒரு சாதாரண வீரரே. அதிர்ஷ்டத்தால் அவர் கேப்டனாகி உள்ளார். சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, கபில்தேவ், ரவி சாஸ்திரி போன்ற முந்தைய கேப்டன்களுடன் ஒப்பிடுகையில், அவர் மிகவும் சாதாரண வீரரே.

இவ்வாறு அவர் பதிவிட்டார்.

இது சமூக வலைதளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களும், ஷாமா முகமதுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் செயல்பாடுகளை ஒப்பிட்டும், அவர்கள் வறுத்தெடுத்தனர்.

கிரிக்கெட்டில் ஹிட்அவுட் எனப்படும், தானாகவே அவுட்டாவதுபோல், இந்த விமர்சனம் கட்சிக்கு எதிராக திரும்பியது, காங்., தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக, தன் பதிவை நீக்கும்படி ஷாமா முகமதுவுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது.

இது குறித்து, காங்., ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:


கிரிக்கெட் ஜாம்பவான் தொடர்பாக ஷாமா முகமது வெளியிட்ட பதிவுடன் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. அது கட்சியின் நிலைப்பாடும் இல்லை. அந்தப் பதிவை உடனே நீக்கும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள் நாட்டுக்காக அளித்துள்ள பங்களிப்பை காங்கிரஸ் எப்போதும் மதிக்கிறது. அவர்களை அவமதிக்கும் எந்த ஒரு கருத்தையும் கட்சி ஏற்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தன் பதிவை ஷாமா முகமது நீக்கியுள்ளார். ஆனால், அவருக்கு எதிரான தாக்குதலை பா.ஜ., தீவிரப்படுத்தியது. குறிப்பாக, காங்., முன்னாள் தலைவரும், தற்போதைய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலை குறிவைத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் கண்டன பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

90 தேர்தல்களில் தோல்வி!

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனேவாலா வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:ராகுல் தலைமையில், 90 தேர்தல்களில் தோல்வியடைந்த காங்., ரோஹித் சர்மா அப்படி என்ன மெச்சத்தக்க வகையில் செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளது. டில்லியில், ஆறு தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிரசுக்கு, டி - 20 உலகக் கோப்பையை வென்றது மெச்சத்தக்கதாக தெரியாததுதான்.தனிப்பட்ட வீரராகவும், கேப்டனாகவும், ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் எப்போதும் பாராட்டக்கூடியவை. ஆனால், இதுபோன்ற ஒரு பதிவை வெளியிட்டது காங்கிரஸ் கட்சிக்கே அவமானம். எல்லாவற்றுக்கும் ராகுல் மட்டுமே பொருத்தமானவர் என்று காங்கிரஸ் நினைக்கிறது. நம் நாட்டுக்கு எதிராகவும், நம் ராணுவம் உட்பட நாட்டின் அமைப்புகளுக்கு எதிராகவும் காங்கிரஸ் தொடர்ந்து அவதுாறாக பேசி வருகிறது.தற்போது, கிரிக்கெட் அணியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. காங்கிரசின் மனப்போக்கை இந்த நாடு பார்த்து வருகிறது. நம் நாடு எதில் வெற்றி பெற்றாலும், சாதனை படைத்தாலும், அதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us