காங்., எம்.எல்.ஏ., ஆபாச வீடியோ போலீசில் இளம்பெண் புகார்
காங்., எம்.எல்.ஏ., ஆபாச வீடியோ போலீசில் இளம்பெண் புகார்
ADDED : மே 03, 2024 06:59 AM

ராம்நகர்; கட்சி பெண் தொண்டருடன், காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹூசைன் வீடியோ காலில் ஆபாசமாக பேசும், வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியானது. இதை காங்கிரசார் தான் செய்தனர் என்று, ம.ஜ.த.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் துணை முதல்வர் சிவகுமார், ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. சிவகுமார் புகைப்படத்தை சித்தரித்ததாக, காங்கிரஸ் சட்ட குழு அளித்த புகாரில், பா.ஜ.,வினர் 3 பேர் மீது வழக்குப்பதிவானது.
இந்நிலையில் ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹூசைன், 65, ஒரு இளம்பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த இளம்பெண் கட்சியின் பெண் தொண்டர் ஆவார்.
ராம்நகர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று சென்ற இளம்பெண், 'இக்பால் ஹூசைன், எனது தந்தை போன்றவர். அவருடன் என்னை சேர்த்து, ஆபாசமாக வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.