சட்டசபை காவலர்களை கடித்து குதறிய காங்.எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்
சட்டசபை காவலர்களை கடித்து குதறிய காங்.எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்
UPDATED : ஆக 07, 2024 03:11 PM
ADDED : ஆக 06, 2024 11:01 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை காவலர்கள் இருவரை கடித்து குதறிய காங்., எம்.எல்.ஏ.,வை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
ராஜஸ்தான் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கூட்டத்தின் போது எதிர்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அவர்களை சபாநாயகர் வாசுதேவ் தேவானி, அவரவர் இருக்கையில் அமர உத்தரவிட்டார்.
எனினும் தொடர்ந்து கோஷமிட்டதால், சபையை விட்டு வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது ஒரு ஆண், ஒரு பெண் என இரு சபை காவலர்கள், காங். எம்.எல்.ஏ.., முகேஷ் பாக்கரை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்க முயன்ற போது சபையை விட்டு வெளியேற மறுத்து சபை காவலர்கள் கையை முகேஷ் பாக்கர் கடித்து குதறினார். இதில் இரு காவலர்களும் காயமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த சபாநாயகர் முகேஷ் பாக்கரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.