காங்கிரசுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும்: பிரதமர் மோடி பிரசாரம்
காங்கிரசுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும்: பிரதமர் மோடி பிரசாரம்
UPDATED : மே 19, 2024 04:30 PM
ADDED : மே 19, 2024 01:45 PM

ராஞ்சி: காங்கிரசுக்கு வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும் என பிரதமர் மோடி கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜூன் 4 ஆம் தேதி ஜாம்ஷெட்பூர் தொகுதியில் பா.ஜ., வெற்றி பெறும் என்பதை உங்கள் உற்சாகம் சொல்கிறது. பல ஆண்டுகளாக பா.ஜ., கட்சியின் ஊழியராக பணியாற்றியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். லோக்சபா தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது மற்றும் பலப்படுத்துகிறது.
பொய்
காங்கிரசுக்கு வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு பொய் சொல்வது மட்டும் தான் தெரியும். ஏழைகளின் பணத்தைப் பறிப்பது, எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி., சமூகத்தின் இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இதைத் தாண்டி அவர்களால் எதையும் சிந்திக்க முடியாதா?.
50 முறை
இண்டியா கூட்டணியினர் மக்களிடம் பொய் சொல்கிறார்கள். அவர்களின் யார் என்று முழு நாட்டிற்கும் தெரியும். கட்சி ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு, எந்த ஒரு தொழிலதிபரும் 50 முறை யோசிப்பார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

