ADDED : மே 04, 2024 11:06 PM

பெலகாவி: ''எனக்கு எதிராக காங்கிரசார் அவப்பிரசாரம் செய்கின்றனர். இதை பொருட்படுத்தாமல், பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற வைத்து, பிரதமர் நரேந்திர மோடியின் கையை பலப்படுத்த வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., பாலசந்திர ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:
என்னை பற்றி காங்கிரசார் அவப்பிரசாரம் செய்கின்றனர். இதை மக்கள் காதில் போட வேண்டாம். ஏப்ரல் 28ல் பெலகாவி பிரதமரின் நிகழ்ச்சி, மாலையில் நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு தயாராகும்படி, எங்கள் தொண்டர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தோம்.
ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி அட்டவணை, காலை 10:00 மணி என மாற்றப்பட்டது. எனவே தொகுதி தொண்டர்களால் வர முடியவில்லை. இதையே காங்கிரசார் பெரிதுபடுத்துகின்றனர். வதந்திகளை பரப்புகின்றனர்.
எங்கள் தொண்டர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதை வாக்காளர்கள் பொருட்படுத்தாமல், பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற வைத்து, பிரதமர் மோடியின் கரத்ததை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.