ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ்: நட்டா தாக்கு
ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ்: நட்டா தாக்கு
ADDED : ஜூன் 25, 2024 03:30 PM

புதுடில்லி: 'இந்தியா ஜனநாயகத்தின் தாய். அத்தகைய ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான நட்டா கூறினார்.
டில்லியில் நடைபெற்ற ஜனநாயகத்தின் கருப்பு தின விழாவில், நட்டா பேசியதாவது: அவசரநிலையைப் பார்த்தவர்களைச் சந்தித்து, நிலைமை என்ன என்பதை அறிய முயற்சி செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இன்று ஜனநாயகம் வலுவாக உள்ளது. தேர்தல் என்ற மிகப்பெரிய திருவிழாவை கொண்டாடியுள்ளோம். இந்தியா ஜனநாயகத்தின் தாய்.
அத்தகைய ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்திரா அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி தனது நாற்காலியை காப்பாற்ற முயன்றார். அதன் பிறகு நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த போராட்டத்தை நிறுத்த, இந்திரா ஜூன் 25ம் தேதி 1975ம் ஆண்டு இரவு அவசர நிலையை அறிவித்தார். அதே இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு நட்டா பேசினார்.