சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் காங்கிரஸ்: அமித்ஷா சாடல்
சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் காங்கிரஸ்: அமித்ஷா சாடல்
ADDED : ஜூன் 25, 2024 04:49 PM

புதுடில்லி: 'சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் காங்கிரஸ் அதிகாரத்தை கையில் வைத்து கொள்ள விரும்புகிறது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திரா எமர்ஜென்சி காலத்தில் மக்கள் மீது இரக்கமற்ற கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் இளவரசர் தனது பாட்டி எமர்ஜென்சி விதித்ததை மறந்துவிட்டார்.
சர்வாதிகாரம்
அவரது தந்தை ராஜிவ் 1985ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி அன்று லோக்சபாவில் எமர்ஜென்சி பற்றி பெருமிதம் கொண்டார். சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் காங்கிரஸ் குடும்பம் அதிகாரத்தை கையில் வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதிகாரத்தை தவிர வேறெதுவும் பிடிக்காது. நமது அரசியலமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் பலமுறை திருத்தம் செய்தது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.