பிரஜ்வல் பெயரில் உலா வரும் வீடியோ குமாரசாமிக்கு காங்., கிண்டல் கேள்வி
பிரஜ்வல் பெயரில் உலா வரும் வீடியோ குமாரசாமிக்கு காங்., கிண்டல் கேள்வி
ADDED : ஏப் 25, 2024 11:22 PM

ஹாசன்: ஹாசன் மாவட்டத்தில், சில நாட்களாக பென் டிரைவ் குறித்து காரசார சர்ச்சை நடக்கிறது. இதில் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் மார்பிங் செய்யப்பட்ட போலியான ஆபாச வீடியோக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஹாசன் ம.ஜ.த., - எம்.பி.,யான பிரஜ்வல் ரேவண்ணா, இம்முறை லோக்சபா தேர்தலிலும் இவரே வேட்பாளராக போட்டியிடுகிறார். சில நாட்களாக ஒரு பென் டிரைவ், உலா வருகிறது.
இதில் பிரஜ்வலின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லோக்சபா தேர்தல் என்பதால், இத்தகைய போலியான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக, பா.ஜ., - ம.ஜ.த., தேர்தல் ஏஜன்ட் பூர்ணசந்திர தேஜஸ்வி, போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புகாரில், 'நவீன் கவுடா உட்பட சிலர், பிரஜ்வலின் வீடியோ, போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளனர். இவற்றை பென் டிரைவ், 'சிடி' மற்றும் வாட்ஸாப் மூலமாக, வாக்காளர்களுக்கு அனுப்பினர்.
இவருக்கு ஓட்டு போடாதீர்கள் என, கூறியுள்ளனர். பிரஜ்வலின் பெயரை கெடுக்கும் நோக்கில், இது போன்று செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதலத்தில் காங்கிரஸ் கூறியுள்ளதாவது:
குமாரசாமி தன் பாக்கெட்டில் இருந்து, அவ்வப்போது வெளியே எடுத்து காண்பித்து, பாக்கெட்டில் வைத்து கொண்ட பென் டிரைவ் இதுதானா. பென் டிரைவில் இருந்த ரகசியம் இதுதானா. ஹாசனின் வீதி, வீதியாக உலா வரும் பென் டிரைவ் உங்களுடையது தானா.
மாநில பெண்களை பற்றி, அவமதிப்பாக பேசிய குமாரசாமி, இப்போது ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்.
வழி மாறி நடந்தது யார் என்பது, இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதா. மாநில மக்களிடம் முகத்தை காண்பிக்க முடியவில்லையா.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

