தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சொம்பு வைத்து காங்கிரசார் போராட்டம்

சொம்பு வைத்து காங்கிரசார் போராட்டம்

சொம்பு வைத்து காங்கிரசார் போராட்டம்


ADDED : ஏப் 21, 2024 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மத்திய அரசு, கர்நாடகாவுக்கு எதுவும் தரவில்லை' என்று கூறி, சொம்பு வைத்து காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசுக்கு கர்நாடகாவுக்கு எதுவும் தராமல், வெறும் சொம்பு கொடுத்து உள்ளது என்று, நேற்று முன்தினம் காங்கிரஸ் விமர்சித்தது. இதற்கு பா.ஜ.,வும் பதிலடி கொடுத்து இருந்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக, நேற்று கர்நாடகா வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சொம்பு வைத்து போராட்டம் நடத்த, காங்கிரசார் முடிவு செய்தனர்.

அதன்படி பெங்களூரு மேக்ரி சதுக்கம், மைசூரு வங்கி சதுக்கம் உட்பட, சில பகுதிகளிலும், மாவட்ட தலைநகரங்களிலும், காங்கிரசார் சொம்பு வைத்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

சிக்கமகளூரு மூடிகெரேயில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., நயனா மோட்டம்மா, தலையில் சொம்பு வைத்து பிரசாரம் செய்து, கவனத்தை ஈர்த்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us