பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது: நிர்மலா சீதாராமன்
பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது: நிர்மலா சீதாராமன்
UPDATED : மே 11, 2024 05:27 PM
ADDED : மே 11, 2024 05:26 PM

புதுடில்லி: பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர்களுடன் நிர்மலா சீதாராமன் உரையாடினார். பின்னர் அவர் கூறியதாவது: காங்கிரசின் ஆட்சி காலத்தில், பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. சரியான பதிலடி கொடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் பார்த்தோம்.
மும்பை தாக்குதல் நடத்தியவர்களுக்கு இன்னும் பாகிஸ்தான் தண்டனை வழங்கவில்லை. பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது. இவ்வாறு அவர் கூறினார்.