கேட்பாரற்று கிடந்த பையால் கன்னாட் பிளேசில் பரபரப்பு
கேட்பாரற்று கிடந்த பையால் கன்னாட் பிளேசில் பரபரப்பு
ADDED : மே 04, 2024 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியில் , கேட்பாரற்றுக் கிடந்த பை போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
கன்னாட் பிளேஸ் என் பிளாக் அருகே நேற்று மதியம் கேட்பாரற்ற ஒரு தோல் பை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர்.
அந்தப் பகுதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
ஆனால், அந்தப் பையில் உடைகள் மட்டுமே இருந்தன. இதனால், கன்னாட் பிளேசில் நேற்று மதியம் பெரும் பரபரப்பு நிலவியது.