மேகதாது அணை அனுமதிக்கு எதிர்பார்ப்பு ஆந்திரா, தெலுங்கானாவுடன் ஆலோசனை
மேகதாது அணை அனுமதிக்கு எதிர்பார்ப்பு ஆந்திரா, தெலுங்கானாவுடன் ஆலோசனை
ADDED : மார் 08, 2025 02:12 AM
தண்ணீர் பயன்படுத்துவதில், கட்டுப்பாட்டை கொண்டு வரும் நோக்கில், நீர்ப்பாசனத் துறையில் மேம்பாடு கொண்டு வர, கர்நாடக நீர்ப்பாசன திருத்த மசோதா - 2024 அமல்படுத்தப்பட்டது
எத்தினஹொளே குடிநீர் திட்டத்தில், தண்ணீரை மேலே எடுத்து குருத்வா கால்வாய் வழியாக, நடப்பாண்டு 241 கி.மீ., வரை தண்ணீர் பாய்ச்சப்படும். திட்டம் நிர்ணயித்த காலத்துக்குள் முடிக்கப்படும்
பத்ரா மேலணை திட்டத்துக்கு, மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த 5,300 கோடி ரூபாய் நிதியுதவியை, இன்னும் வழங்கவில்லை. மாநில அரசு தேவையான நிதி வழங்கி, திட்டத்தை முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நடப்பாண்டு 2,611 கோடி ரூபாய் செலவில், சித்ரதுர்கா கிளை கால்வாய் பணிகள் முடிக்கப்படும். இதன் மூலம் ஹொசதுர்கா, ஹொலல்கெரே, ஜகலுார், மொலகால்மூரு, செல்லகெரே மற்றும் பாவகடா தாலுகாவின், 30 ஏரிகளை நிரப்பி, 1.87 லட்சம் ஏக்கர் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி செய்யப்படும்
கிருஷ்ணா மேலணை திட்டத்தின், மூன்றாம் கட்டத்தில் அலமாட்டி அணையின் கேட் 524.256 மீட்டர் வரை உயர்த்தப்படுவதால், மூழ்கும் நிலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். 2.01 லட்சம் ஏக்கர் பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி செய்யும் பணிகள் முடிக்கப்படும்
மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த, முன்னேற்பாடுகள் நடக்கின்றன. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், பணிகள் துவக்கப்படும்
கலசா - பண்டூரி கால்வாய் திட்டத்தின் கீழ், 3.9 டி.எம்.சி., தண்ணீரை பயன்படுத்த மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து, சில நிபந்தனைகளுடன் பணிகள் ஒப்பந்ததாரரிடம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், பணிகள் துவங்கும்
கிருஷ்ணா நீர்ப்பாசனம், காவிரி நீர்ப்பாசனம் உட்பட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களில் பாக்கியுள்ள பணிகள், விரைந்து முடிக்கப்படும். திட்டப் பணிகளுக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கேட்கப்படும்
நீர்ப்பாசன துறையில், பணிகளுக்கு செலவு மதிப்பிடும் போது, ஒரே விதமான தொழில்நுட்ப விதிமுறைகள் செயல்படுத்தப்படும்
துங்கபத்ரா அணையில் நிரம்பியுள்ள மண்ணால், நீர் சேகரிப்பு திறன் குறைந்துள்ளது. இதை ஈடுகட்டும் நோக்கில், கொப்பால் மாவட்டத்தில் துங்கபத்ரா அணைக்கு சமமான அணை கட்டுவது உட்பட மாற்று வசதி செய்யப்படும். இது தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்படும்
மாநிலத்தின் முக்கிய அணைகளின் பலம், தொழில்நுட்ப உதவியால் ஆய்வு செய்யப்படும். அவசியம் ஏற்பட்டால் அணைகளின் மதகுகள் பலப்படுத்தப்படும்.