பில் தொகைக்கு போராட்டம் ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை
பில் தொகைக்கு போராட்டம் ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை
ADDED : ஆக 29, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்க தலைவர் நந்தகுமார், நேற்று அளித்த பேட்டி:
அரசு நிதியுதவி, மாநகராட்சி நிதியுதவியில் நடத்தி முடிக்கப்பட்ட பணிகளுக்கான பில் தொகையில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதை செலுத்தும்படி துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அதிகாரிகளிடம், பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அவர்களும் தொகையை வழங்குவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே இது தொடர்பாக, சங்கத்தின் நிர்வாகிகளுடன், நாளை (இன்று) ஆலோசனை நடத்தப்படும். போராட்டம் நடத்துவது குறித்து, முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

