ADDED : ஆக 20, 2024 11:28 PM
யாத்கிர் : ஹிந்துக்களை மதம் மாற்றம் செய்ய முயன்ற, இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
யாத்கிர் டவுன் லட்சுமி லே --- அவுட்டில் உள்ள வீடுகளுக்கு நேற்று காலை இரண்டு பெண்கள் சென்றனர். ஏழ்மை நிலையில் இருக்கும் ஹிந்துக்களிடம், நைசாக பேச்சு கொடுத்தனர்.
'உங்களது கஷ்டத்தை போக்குகிறோம். ஹிந்து மதத்தை கைவிட்டு கிறிஸ்துவ மதத்திற்கு வாருங்கள்' என்று கூறி மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த ஹிந்து அமைப்பினர் அங்கு சென்று, இரண்டு பெண்களையும் பிடித்து யாத்கிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் பெங்களூரை சேர்ந்த ரேச்சல் ராபர்ட், 45, கருணா, 43 என்பது தெரிந்தது. முந்தைய பா.ஜ., ஆட்சியில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க, மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.