ADDED : ஆக 13, 2024 07:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
டில்லியில் இருப்பதை போன்று, பெங்களூரிலும் மாநகராட்சி பஜார் கட்டப்படும். இது அண்டர்கிரவுண்ட் மார்க்கெட்டாகும்.
முற்றிலும் 'ஏசி' வசதி கொண்டது. முதற்கட்டமாக விஜயநகரில், மாநகராட்சி பஜார் கட்டப்பட்டுள்ளது. 2-019ல் பணிகள் துவங்கி, நிறைவு பெற்றுள்ளது.
புதிய மாநகராட்சி பஜார், விஜயநகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகிலேயே உள்ளது.
இதில், 78 கடைகள் உள்ளன. இந்த பஜார், 100 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்டது. 3 மீட்டர் அகலமான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் செலவிலான திட்டம் இதுவாகும்.
லிப்ட், எஸ்கலேட்டர் வசதி கொண்டுள்ள மார்க்கெட்டில், இரண்டு கேட்களின் வழியாக எளிதில் நுழையலாம்.
புதிய மார்க்கெட், இம்மாதம் இறுதியில் திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

