உலர்ந்த மரங்கள், கிளைகள் பற்றி தகவல் தர மாநகராட்சி அழைப்பு
உலர்ந்த மரங்கள், கிளைகள் பற்றி தகவல் தர மாநகராட்சி அழைப்பு
ADDED : மே 19, 2024 06:51 AM
பெங்களூரு : சாலை ஓரங்களில் உலர்ந்த மரங்கள், கிளைகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்கும்படி, பொதுமக்களிடம் பெங்களூரு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
உலர்ந்த மரங்கள், வேருடன் சாய்கின்றன. காற்றின் வேகத்தால் பசுமையான மரக்கிளைகளும் முறிந்து விழுகின்றன. இதனால் பொதுமக்களின் சொத்துகள் சேதமடைகின்றன. பலர் காயமடைந்த உதாரணங்களும் உள்ளன.
சாலை ஓரங்களில், அரசு இடங்களில் உலர்ந்துள்ள, அபாய நிலையில் உள்ள மரங்கள், கிளைகளை அகற்றும் பணிகளை, பெங்களூரு மாநகராட்சியின் வனப்பிரிவு மேற்கொண்டுள்ளது.
நகர மக்களும், தங்கள் பகுதிகளில் உலர்ந்துள்ள, அபாய நிலையில் உள்ள மரங்கள், மரக்கிளைகளை பார்த்தால், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக மண்டல வாரியாக, 'வாட்ஸாப்' எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

