ADDED : ஜூலை 03, 2024 10:25 PM
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சியின் நடந்ததாக கூறப்படும், பல கோடி ரூபாய் முறைகேடு குறித்து விசாரணை நடத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின் கோடிக்கணக்கான ரூபாய், செயல்பாட்டில் இல்லாத கூட்டுறவு சங்கங்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளாக, குற்றச்சட்டு எழுந்துள்ளது. இது குறித்து, ஊடகங்களில் செய்தி வெளியானது.
இது குறித்து, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.
மாநகராட்சியின் எட்டு மண்டலங்களின், சமூக நலப்பிரிவுக்கு வழங்கப்பட்ட நிதி குறித்து, தகவல் பெற்றுள்ளார். எந்தெந்த சொசைட்டிகளுக்கு பண பரிமாற்றம் நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, வருவாய் பிரிவு அதிகாரிகளுக்கு, தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகளும் விசாரணையில் இறங்கிஉள்ளனர்.