ADDED : ஆக 01, 2024 12:31 AM
பெங்களூரு, : பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும்படி மாநில அரசிடம், கே.எஸ்.ஆர்.டி.சி., மற்றும் பி.எம்.டி.சி., நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அரசுக்கு போக்குவரத்து கழகங்கள் அனுப்பிய கோரிக்கை:
பல ஆண்டுகளாக, பி.எம்.டி.சி.,யின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லை.
கே.எஸ்.ஆர்.டி.சி., உட்பட இதர மூன்று போக்குவரத்து கழகங்களின் டிக்கெட் கட்டணம் உயர்த்தி, நான்கு ஆண்டுகள் ஆகின்றன.
ஏற்கனவே மாநில அரசு, டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டுதோறும் கூடுதலாக 190 முதல் 200 கோடி ரூபாய் சுமை ஏற்படுகிறது. எனவே டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
பி.எம்.டி.சி.,யில் 37 சதவீதம், கே.எஸ்.ஆர்.டி.சி., உட்பட மற்ற மூன்று போக்குவரத்து கழகங்களில் பயண டிக்கெட் கட்டணம் தலா 3-0 சதவீதம் உயர்த்த வேண்டும்.
டீசல் விலையுடன், பஸ்களின் உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஊழியர்களின் ஊதியமும் உயர்த்தப்பட்டது. எனவே டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.