தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கைது செய்யும் விதிகளை நீக்க ஜி.எஸ்.டி., கவுன்சில் திட்டம்

கைது செய்யும் விதிகளை நீக்க ஜி.எஸ்.டி., கவுன்சில் திட்டம்

கைது செய்யும் விதிகளை நீக்க ஜி.எஸ்.டி., கவுன்சில் திட்டம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் உள்ள கைது நடவடிக்கைகளுக்கான விதிகளை நீக்குவது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 57வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டில்லியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது வரி முறைகேடுகளை துல்லியமாக கண்டறியும் அளவுக்கு கண்காணிப்பு திறன் மேம்பட்டுள்ளதால், 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி., அமலாக்கத்தின்போது சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த பாதுகாப்பு விதிகள் விரைவில் தளர்த்தப்பட வாய்ப்புள்ளது.

விற்பனையாளர்கள் தாக்கல் செய்யும் விபரங்களையும், வாங்குபவர்கள் கோரும் உள்ளீட்டு வரி பயனையும் அரசு ஒப்பிட்டு சரிபார்க்கிறது. இதன் வாயிலாக, போலி உள்ளீட்டு வரி பயன் குறித்த தகவல், உருவாகும் நிலையிலேயே கண்டறியப்பட்டு, அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லும் முன்பு தடுக்க முடியும்.

இதன் அடிப்படையில், ஜி.எஸ்.டி., சட்டத்தில் உள்ள கைது விதிகள் நீக்கப்படும். இதற்கு பதிலாக வரி, வட்டி மற்றும் அபராதத்தை வசூலிக்கும் நடவடிக்கைகள் வழியாக அனைத்து முரண்பாடுகளும் களையப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us