பஞ்சாப், உ.பி.,யில் விபத்து தம்பதி, சகோதரர்கள் பலி
பஞ்சாப், உ.பி.,யில் விபத்து தம்பதி, சகோதரர்கள் பலி
ADDED : ஆக 14, 2024 12:17 AM
ஹோஷியார்பூர்:பஞ்சாபில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரு சகோதரர்கள் உயிரிழந்தனர்.
ஹோஷியார்பூர் மாவட்டம் சோட்டாலா கிராமத்தைச் சேர்ந்த மங்கள் சிங்,48, அவரது மகன் சந்தீப் மற்றும் அவரது சகோதரர் ஜிந்தர் சிங்,50, ஆகிய மூவரும் நேற்று முன் தினம் இரவு, பைக்கில் சென்றனர். அப்போது எதிரில் வந்த கார், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. பைக்கில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மங்கள் மற்றும் ஜிந்தர் ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த சந்தீப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, புங்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தம்பதி உயிரிழப்பு
-உத்தர பிரதேசத்தின் மொரதாபாத் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் சுதிர் குமார், 28. அவரது மனைவி சோனியா,26. இருவரும் நேற்று காலை டில்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றனர். அப்போது எதிரில் வந்த லாரி, பைக் மீது மோதியது.
இருவரும் லாரிக்கு அடியில் சிக்கினர். அதேநேரத்தில் லாரியும் தீப்பிடித்து எரிந்தது. சுதிர் மற்றும் சோனியா ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த முசாபர்நகர் போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.