ADDED : ஆக 07, 2024 11:59 PM
பஸ்சிம் விஹார்: மேற்கு டில்லியில் உள்ள பஸ்சிம் விஹாரில் கிரிக்கெட் சூதாட்டத்தை முறியடித்து, 14 பேரை போலீசார் கைது செய்து, 2.21 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
பஸ்சிம் விஹார் பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் குறிப்பிட்ட வீட்டை சோதனை நடத்தினர். அங்கு கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததை போலீசார் உறுதி செய்தனர்.
அத்துடன் அங்கிருந்த 14 பேரை கைது செய்த போலீசார், 2.21 கோடி ரூபாய் ரொக்கம், 18 செல்போன்கள், இரண்டு ரூபாய் எண்ணும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மோசடியின் மன்னன் அங்கித் கோயலும், 35, ஒருவர் என போலீசார் தெரிவித்தனர்.
சூதாட்டத்தை ஒருங்கிணைத்தது, அங்கித் கோயல் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை போலீசார் வெளியிட்டனர். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.