சுவர் இடிந்து சிறுமி பலி
தட்சிணகன்னடா, உல்லாளின் நுாடப்பு கிராமத்தில் நேற்று மதியம் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய மூன்றாம் வகுப்பு மாணவி சாஜியா, 7, உயிரிழந்தாள்.
அலுவலகத்தில் மது அருந்திய அதிகாரி
விஜயபுரா, இன்டியின், ஹிரேமசள்ளி கிராமத்தில் உள்ள, மின் வினியோக அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றுபவர் கொல்லாளப்பா. இவர் நேற்று காலை, அலுவலக வளாகத்தில், மது அருந்தினார். இதை பார்த்த சிலர், இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
தேனீக்கள் தாக்கி ஒருவர் பலி
சாம்ராஜ்நகர், ஹனுாரின் பெளத்துாரு கிராமத்தில் வசித்த துளசி தாஸ், 45. இவர் நேற்று காலை வாழைத் தோட்டத்தில், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது தேனீக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இவரது மனைவி ஆஷா, 40, காயமடைந்து சிகிச்சை பெறுகிறார்.
நீரில் மூழ்கி இருவர் பலி
பாகல்கோட், ரபகவி - பனஹட்டி அருகில் உள்ள ஹோசூர் கிராமத்தில் வசித்த சஞ்சய், 13, நந்தகாவ் சமர்த் ஜுல்லி, 10, நேற்று காலை குளிப்பதற்காக ஏரிக்குச் சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்ற இவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விபத்தில் இளைஞர் மரணம்
தட்சிணகன்னடா, பன்ட்வாலின் பானி மங்களூரு என்ற இடத்தில், நேற்று மாலை வேகமாக சென்ற ஆட்டோ, பைக் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. ஆட்டோ பல்டி அடித்ததில், அதில் பயணம் செய்த அல்தாப், 18, துாக்கி வீசப்பட்டார். விழுந்த வேகத்தில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

