sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிரைம் கார்னர்

/

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : மே 24, 2024 06:13 AM

Google News

ADDED : மே 24, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைக் விபத்தில் வாலிபர் பலி

பாகல்கோட் இளகல்லை சேர்ந்தவர் ஜெகதீஷ், 28. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து இளகல்லுக்கு தன் நண்பர் சஷாங்க் பாட்டீல், 28, உடன் பைக்கில் சென்றார்.

நேற்று காலை விஜயநகராவின் ஹொஸ்பேட் துங்கபத்ரா அணை அருகே, பைக் சென்றது. கட்டுப்பாட்டை இழந்த பைக், தறிகெட்டு ஓடி அணைக்குள் பாய்ந்தது. தண்ணீர் இல்லாததால், பாறையின் மேல் இருவரும் விழுந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த, ஜெகதீஷ் இறந்தார். சஷாங்க் பாட்டீல் சிகிச்சை பெறுகிறார்.

ஏரியில் பாய்ந்த கார்

சிக்கமகளூரு அருகே அம்பலே கிராமத்தின் தினேஷ், 32. நேற்று காலை காரில் சிக்கமகளூரு சென்றுவிட்டு, கிராமத்திற்கு திரும்பினார். காரை இன்னொருவர் ஓட்டினார். அம்பலே கிராம பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், ஏரிக்குள் பாய்ந்தது. காரை ஓட்டியவர் கதவை திறந்து நீச்சல் அடித்து தப்பினார். ஆனால் காருக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தினேஷ் இறந்து விட்டார்.

கொள்ளை வழக்கு: 5 பேர் கைது

விஜயபுராவின் கோல்ஹாரா பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பருத்தி மூட்டை லாரி சென்றது. லாரியை மறித்த கும்பல், டிரைவர், கிளீனரை தாக்கிவிட்டு 32 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது.

இந்த வழக்கு தொடர்பாக கோல்ஹாரா போலீசார், 4 பேரை கைது செய்தனர். அவர்கள் பசவனபாகேவாடியின் சுரேஷ் ரேவணசித்தப்பா, 21, சுனில் ராமப்பா, 21, சிவானந்த பசப்பா, 21, சிந்தகியின் சிவப்பா சரணப்பா, 39 என்பது தெரிந்தது. விசாரணையில் லாரி டிரைவரான மஹாந்தேஷ், 35 என்பவருக்கும் கொள்ளையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதாவது தன்னை தாக்கி கொள்ளையடிப்பது போன்று, மஹாந்தேஷ் நாடகம் அரங்கேறியது தெரிந்து உள்ளது. இவர்களிடம் இருந்து 31 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு உள்ளது.

அரை நிர்வாண வாலிபர்

சித்ரதுர்கா டவுனில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. நேற்று மதியம் அந்த விடுதிக்குள் ஒரு வாலிபர், அரை நிர்வாண நிலையில் புகுந்தார். அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் அலறினர். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அந்த வாலிபரை பிடித்து 'தர்ம அடி' கொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். குடிபோதையில் அரை நிர்வாணமாக தங்கும் விடுதிக்குள் வாலிபர் புகுந்தது தெரிந்தது. அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

குட்டையில் இருவர் பலி

ஷிவமொகா அருகே சன்னஹள்ளி கிராமத்தின் அபய், 16. நேற்று மதியம் கிராமத்தில் உள்ள விவசாய பண்ணை குட்டையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். நீச்சல் தெரியாமல் தத்தளித்தார். அந்த வழியாக வந்த மால்தேஷ், 27 என்பவர், அவரை காப்பாற்ற குட்டையில் குதித்தார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். சிறிது நேரத்தில் குட்டையில் மூழ்கி இருவரும் இறந்தனர்.






      Dinamalar
      Follow us